Description
வாசகர்களின் வாழ்க்கையையே மாற்றக் கூடிய சில புத்தகங்கள் ஒரு நூற்றாண்டில் அவ்வப்போது தோன்றுவதுண்டு. அத்தகைய ஒன்றுதான் பெளலோ கொய்லோவின் ''ரஸவாதி''. உலக முழுவதும் நாற்பத்திரண்டு மொழிகளில் 20 கோடிப் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. நவீன கிளாசிக் என்ற பெயரையும் பெற்றுவிட்டது.நம் இதயம் கூறுவதை நாம் கவனமாகக் கேட்கவேண்டும். வாழ்க்கைப் பாதையில் விதி சுட்டிக்காட்டும் சகுனங்களையும் கவனிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக நம் கனவுகளை நாம் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தும் சில நூல்களில் இதுவும் ஒன்று.கொய்லோவின் கவிதை நடை படிப்போர் முகத்தில் ஒரு புன்னகையையும் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடியது.