பள்ளி கொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்)


Author:

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 325.00

Description

காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ''பள்ளிகொண்டபுரம்'', நீல.பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்தன் நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில், கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய-இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது.''''மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த சிலர் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புகளில் திருவனந்தபுரம் எனும் நகரை விளக்கமாய் வர்ணித்துள்ளார்கள். ஆனால், அவர்களுள் ஒருவராலும் - ஸி.வி.இராமன் பிள்ளையாலோ, தகழி சிவசங்கரப்பிள்ளையாலோகூட இந்த நகரின் ஆத்மாவைச் சிக்கெனப் பிடிக்க இயலவில்லை...ஆனால் திரு.நீல.பத்மநாபன் எனும் ஒரு தமிழ் நாவலாசிரியருக்குத்தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின் ஒரு பரிபூரண தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது'''' என்று மலையாள விமர்சகர் என்.வி.கிருஷ்ணவாரியரால் பாராட்டப்பட்ட நாவல் ''பள்ளிகொண்டபுரம்''.

You may also like

Recently viewed