ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் (உலக அரசியல் கட்டுரைகள்)


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 150.00

Description

அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட உலக அரசியல் போக்கை இவ்வாய்வு இரத்தமும் தசையுமாகப் பார்க்க முயற்சிக்கின்றது. அத்தகைய அரசியல் போக்கைச் செங்குத்தாகவும் குறுக்கு வெட்டாகவும் நின்று பார்க்க முனையும் இவ்வாய்வு, உலகப்போக்கை அதன் நிர்வாணக் கோலத்தில் அப்படியே சித்தரிக்க விரும்புவது மட்டுமின்றி, எக்ஸ்றே (X-ray) படம்பிடித்தாற் போல், அதன் அனைத்து உள்ளோட்டங்களையும் பார்க்க முனைகின்றது. தத்துவத்தையும் நடைமறையையும் சீர்தூக்கிப் பார்க்க விரும்பும் இவ்வாய்வு உலகளாவியரீதியில் கற்பனைகளைக் கடந்து, யதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்ட முயற்சிக்கின்றது.மேற்குலக ஆதிக்க வரலாற்றை முழுநீளப் போக்காகச் சித்தரிக்க முனையும் இவ்வாய்வு, அந்த மேற்குலகின் ஆதிக்கத்திற்கிடையே ஒரு முனையில் பின்லாடனையும், மறுமுனையில் ஃபிடல் கஸ்ட்ரோவையும் இரு அந்தலைகளாக்கி ஆய்வு செய்கின்றது. இதில் பின்லாடன் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களையும், தொடர்ந்து அரை நூற்றாண்டுகாலகமாக அமெரிக்காவால் ஃபிடல் கஸ்ட்ரோவைத் தோற்கடிக்க முடியாதுள்ளமைக்கான காரணங்களையும் கண்டறிய விளைகின்றது.

You may also like

Recently viewed