தியானம் (60 தியான முறைகளும் விளக்கங்களும்)

Save 3%

Author: ஓஷோ

Pages: 432

Year: NA

Price:
Sale priceRs. 390.00 Regular priceRs. 400.00

Description

தியானம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஓஷோ தெளிவுப்படுத்துகிறார். தியானம் என்றால் - விளையாட்டுத் தன்மை மிக்கது. தியானம் என்றால் இறுக்கமான ஒன்றல்ல.தியானம் பற்றிய அடிப்படையான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார்.அவரது செயல்முறைகளில், மிகவும் புரட்சிகரமான, டைனமிக் தியானத்தில் உள்ள ஒவ்வொரு நிலையைப் பற்றியும் விரிவான விளக்கம் தருகிறார்.ஓஷோவின் செயல்முறைகள் பலவற்றிற்கான விரிவான விளக்கங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பராம்பரியமிக்க செயல்முறைகளெல்லாம் ஒஷோவால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு அதனின் மூலத்தைப் போலவே நமக்குத் தருகிறார்.தம் , ஒஷோவின் தியான முறைகள் செயல் பாங்கில் துவங்கி, அமைதியை நோக்கியும், மணமற்ற விழிப்பு நிலையின் நிலைத்த தன்மைக்கும் கொண்டு செல்கிறது.உங்களுக்கு நான் கொடுத்திருக்கும் அனைத்து தியான முறைகளும் என்னை சார்ந்ததாக இல்லை. என்னுடைய முன்னிலையோ அல்லது நான் இல்லாமலிருப்பதோ எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்கப் போவதில்லை. அவைகள் உங்களை சார்ந்தே உள்ளது. அவைகள் வேலை செய்ய என்னுடைய முன்னிலை தேவையில்லை. ஆனால் உங்களின் முன்னிலை தேவைப்படுகிறது. என்னுடைய மெய்யிருப்பு இங்கு தேவையில்லை. ஆனால், உங்களின் மெய்யிருப்பு இங்கே, உங்களின் மெய்யிருப்பு நிகழ்கணத்தில், இருக்கவேண்டும். உங்களின் மெய்யிருப்பு உஷாராகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும். இவைதான் உதவி புரியும்.

 

You may also like

Recently viewed