Description
பாரதம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு ஒரே விடை வேங்கடத்துக்கு இப்பாலும் வேங்கடத்துக்கு அப்பாலும் உள்ள கோயில்களில் கொலுவிருக்கிறது என்பதே! அந்த விடை மொழிக்கு நடை மொழியிலே கட்டப்பெற்ற ஓர் அழகான சொற்கோயிலே இந்த நூல். கற்கோயிலைச் சொற்கோயிலாக நிறுத்துகிறது என் நண்பர் பாஸ்கரனின் இரசவாதத் தமிழ். அதைப் படித்துப் படித்து மகிழ்கிறேன்.