திரைப்படக் கலை


Author: முனைவர் வெ.மு. ஷாஜகான் கனி

Pages: 320

Year: 2011

Price:
Sale priceRs. 210.00

Description

திரைப்படம்... உலகில் தோன்றிய படிப்படியான வரலாறு இந்நூலில் படங்களோடு விளக்கப்பட்டுள்ளது.படப்பிடிப்புத் தொழில்நுட்பங்களின் பல்வேறு நிலைகளை எளிமையாக விளக்கியுள்ள பாங்கு, திரையுலகில் கால்பதிக்க நினைக்கும் புதியவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். கட்டமிடுதல், கோணம், ஒளியமைப்பு, ஒருங்கமைப்பு, கேமரா நகர்வுகள்... இவற்றிற்கு ஒரு பொது இலக்கணமாக இந்நூலாசிரியர் கூறும் ‘ஒருவரி விதி’ வியந்து ஏற்கத்தக்கது! தந்திரக் காட்சிகள், திரைமொழி, திரைப்பட உத்திகள் முதலியவற்றைப் படச்சான்றுகளுடன் இந்நூல் தருவது, எளிய புரிதலுக்கு உதவுகிறது. திரைக்கதை எழுதும் முன்பணியும் படத்தொகுப்பு என்னும் பின்பணியும் விளக்கப்பட்டுள்ள விதம் அருமை! ‘சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை’ என்ற இந்நூலாசிரியரின் முந்தைய நூலுக்குத் தமிழ் சினிமா இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள், சினிமாவை சுவாசக் காற்றாக நேசிக்கும் நான், என்னைப்போன்ற இன்னொருத்தரை உங்களில் பார்த்த மகிழ்வுடன்... என்று எழுதிய பாராட்டு வரிகளை இந்நூல் தக்கவைத்துள்ளது.

You may also like

Recently viewed