Description
சீன இலக்கியத்தையும் பண்பாட்டையும் தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வரும் ஜெயந்தி சங்கரின் புதிய பங்களிப்பு இந்த நூல். கம்யூனிச யுகத்திலும் அதற்குப் பின்பும் சீன இலக்கியத்தில் நேர்ந்திருக்கும் திசை மாற்றத்தை அடையாளம் காட்டுகின்றன இந்த நூலிலுள்ள சிறுகதைகள். அதிகாரபூர்வ இலக்கியமாக அறிமுகப்படுத்தப் பட்டவற்றைக் கடந்து கலையாக இலக்கியம் வடிவம் பெற்றிருப்பதை இந்தக் கதைகளிலிருந்து அறியலாம். 2000ஆம் ஆண்டு இலக்கியத்துக்காக முதன்முறையாக நோபெல் பரிசுபெற்ற காவோ ஸிங் ஜியாங் உள்ளிட்ட பதின்மூன்று எழுத்தாளர்களின் கதைகளடங்கிய இந்த நூலை பழைய திசையில் புதிய உதயம் என்று தயங்காமல் சிறப்பிக்கலாம்.