Description
மொழி என்பது ஓர் இடத்தின் உள்ளூர் நிலப்பண்பின் தன்மையையும், பேச்சு வழக்கையும், வரலாறையும், அந்த மொழியைப் பேசும் மக்களின் வாழ்முறையையும், நம்பிக்கைகள், நியமங்கள் முதலிய பலவற்றையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. எனவே, ஒரு பிரதியை மொழிபெயர்த்தல் என்பது மேற்குறிப்பிட்ட அம்சங்கள், விவரங்கள் அனைத்தையும் புரிந்துகொள்வதையும், அவை முன்வைக்கும் சவால்களையும், பிரச்னைகளையும் கடந்துசெல்வதையும் உள்ளடக்கிய செயல்பாடாகும். இந்திய மொழிகளில் இயங்கிவரும் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கிறார்கள்.