Description
உபாசகன் என்ற சொல்லிற்கு ஒரு படைப்பிலக்கியம் சார்ந்த உருவகம் இருக்கும் என்றால் அது லா.ச.ராமாமிருதமே. இந்திய மரபின் ஆன்மீகத்தையும் சிருங்காரத்தையும் மாபெரும் அழகியல் தரிசனமாக மாற்றுவதில் சிகரத்தை எட்டியவை அவரது எழுத்துக்கள். மனதின் புதிர்மிகுந்த பாதைகளில் ஆயிரம் ஆயிரம் கனவுகளின் வண்ணங்களை உருவாக்குபவை இந்தக் கதைகள். அவை மௌனங்களின் பெரும் விம்முதலைத் தருகின்றன. ரகசியங்களின் பிரம்மாண்டமான விகாசத்தைக் கட்டி எழுப்புகின்றன. ஒருபோதும் பெயரிடமுடியாத, வரையறுக்கவியலாத உணர்ச்சிகளால் நம்மைத் ததும்பவைக்கின்றன. நான்கு தொகுதிகளைக் கொண்ட அவரது சிறுகதைகள் வரிசையில் இரண்டாவது தொகுதியான இந்நூலில் அவரது 30 கதைகள் இடம்பெறுகின்றன.