Description
17 சிறுகதைகளைக் கொண்ட மண் பாரம், இமையத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் இதுவரை பிரசுரமாகாத ஆறு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. “இமையத்தின் கதைகளை வாழ்க்கையே இயக்குகிறது. இமையத்தின் கதைகளின் சிறப்பு இதுதான். இந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள், இலக்கிய உத்திகள் நிர்ணயிக்கவில்லை. அறிவுபூர்வமாகத் தெரிந்தெடுத்த சமூகத் தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை. அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணயிக்கிறது. கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு. கதைகள் சொல்லும் நிஜ வாழ்க்கையைப் போல, அலங்காரம் இல்லாமலே கதைகளும் நிஜ வடிவம் எடுக்கின்றன. வாழ்க்கை கதையாவதற்குப் படைப்பாளியின் ஜோடிக்கும் திறன் அவசியத் தேவை இல்லை. கதையையும் மொழியையும் பூ வேலை இல்லாமலேயே நேர்த்தியாக, நெருடலில்லாமல் நெய்யும் திறனே அடிப்படையான அவசியம். இந்தத் திறன் இமையத்திடம் இருப்பதை இந்தக் கதைகள் காட்டுகின்றன.”