Description
இரண்டாவது முறை குயில் கூவும்போது ஸ்ரீராமுலு செட்டியார் படுக்கை விட்டு எழுந்து விட்டார்.
கட்டிலுக்கு அருகே உள்ள மேஜையைத் தடவி டேபிள் லேம்ப் சுவிட்ச் போட்டார். டைம்பீஸ் நாலே முக்கால் என்று காட்டியது.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்று நீராடினால் தீங்கின்ற நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நலூடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்டுபடுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்..

