Description
பொதுவாழ்வில் ஈடுபடுவோர் தூய்மையாக பணிபுரிய வேண்டும் என்ற அவாவின் காரணமாக இந்நூலாசிரியர் தம் ஆதங்கங்களை சரியான எடுத்துக்காட்டுகளுடன் தெரிவித்துள்ளார். மிகுந்த அரசியல் அனுபவமும் பழுத்த வயதும் உடைய இவர், தமிழகம் இன்னும் உயர்வடைய பல நல்ல கருத்துகளை மிகத் துணிவுடன் கூறியுள்ளார்.தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் வரவிற்குப்பின் ஏற்பட்ட சமுதாய சீரழிவுகளையும் தாழ்ந்த தமிழகத்தின் நிலைமைக்கு காரணமானவர்களையும் இந்நூலாசிரியர் தக்க அகச்சான்றுகளுடன் எழுதியுள்ளார்.நூலின் முதல் பகுதியில் இன்றைய முதல்வருக்கு நூலாசிரியர் விடுக்கும் வேண்டுகோளும், மூன்றாம் பகுதியில் கண்ணதாசனின் 100 கேள்விகள் என்ற பகுதியும் அனைவரும் படிக்கவேண்டியவை.பொது மக்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் படித்து உணரவேண்டிய பல செய்திகள் உடையதாக இந்நூல் விளங்குகிறது.- டாக்டர் கலியன் சம்பத்