விடுதலைப் போரில் தமிழகம் 3 தொகுதிகள்


Author: ம.பொ.சிவஞானம்

Pages: 1360

Year: 2006

Price:
Sale priceRs. 1,350.00

Description

சுமார் 1250 பக்கங்களுக்கும் மேலாக மூன்று தொகுதிகளில் சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம் அவர்களின் எழுத்தோவியத்தில் வெளிவந்திருப்பதும் TNPSC, UPSC, Civil Services ஆகிய ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கும் மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கும் பயன் தருவதுமான "விடுதலைப் போரில் தமிழகம்" என்ற இந்நூல் வரலாற்றுப் பதிவுகளின் கருவூலம் எனலாம். இந்தியாவின் நீண்ட கால வரலாற்றை ஆராய்ந்தால் அன்னிய நாட்டினரால் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள், தமிழகத்தை விட்டுவிட்டு எஞ்சிய இந்தியாவை மட்டும் அடிமைப்படுத்தியதென்றொ, எஞ்சிய இந்தியாவை விட்டுவிட்டு தமிழகத்தை மட்டும் அடிமைப்படுத்தியதென்றொ சொல்வதற்கில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மொகலாய ஆக்கிரமிப்பும் சரி; பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆக்கிரமிப்பும் சரி; வட இமயம் தொடக்கி தென் குமரி வரையுள்ள இந்தியா முழுவதையும்தான் அடிமைப்படுத்தியதனை வரலாறு காட்டுகிறது. ஆகவே, தமிழன் தனது விடுதலைக்காக போராடியதனை தேச பக்தியோடு அணுகி அனைத்திந்திய கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டியது அவசியமாகிறது. அப்படித்தான் இந்நூலும் படைக்கப்பட்டுள்ளது. "விடுதலைப் போரில் தமிழகம்" என்னும் பெயரைப் பெற்றிருப்பினும், இந்திய விடுதலைப் போர் சம்பந்தப்பட்ட அனைத்திந்திய நிகழ்ச்சிகள் எல்லாம் இதிலே தரப்பட்டுள்ளன. இதனைப் படித்து முடித்தால், இந்திய விடுதலைப் போர் முழுவதையும் படித்தது போன்ற மனநிறைவு ஏற்படும். இது இந்நூலுக்குள்ள தனிச் சிறப்பு ஆகும்.

You may also like

Recently viewed