கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)


Author: சுஜாதா

Pages: 176

Year: 2011

Price:
Sale priceRs. 220.00

Description

தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர். அந்த வகையில், சமூக வளர்ச்சியையும் சிதைவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து அலசி ஆராய்ந்து அக்கறையோடு எழுதப்பட்ட கட்டுரைத் தொடர் 'கற்றதும்... பெற்றதும்...' தான் கற்றதையும் பெற்ற அனுபவங்களையும் புதிய சிந்தனையுடன் கலந்து சுஜாதா அளித்திருக்கும் அற்புதமான அனுபவக் களஞ்சியம்தான் இப்போது உங்கள் கைகளில் புத்தமாகத் தவழ்கிறது. நாட்டு நடப்புகளை, நயமான நகைச்சுவை கலந்து சுஜாதா எழுதும் எழுத்தை வரவேற்றுப் படித்து வரும் வாசகர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, விகடனில் வெளியான 'கற்றதும்... பெற்றதும்...' கட்டுரைத் தொடர்களை இதற்குமுன் இரண்டு பாகங்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். புதிய கட்டுரைகளுடன் மூன்றாவது பாகம் இதோ உங்கள் பார்வையில்! இந்தப் புத்தகம் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தி புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுதலாக அமையும்.

You may also like

Recently viewed