ஸ்ரீ வேதாந்த தேசிகர் (1268 - 1369) ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் - 750


Author: தமிழ் திசை

Pages:

Year: 2018

Price:
Sale priceRs. 300.00

Description

வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவரான ஸ்ரீ வேதாந்த தேசிகர், கி.பி. 1268-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தூப்புல் என்னும் இடத்தில் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாகப் பிறந்த தத்துவ வித்தகர் ஆவார். இவரது 750-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ‘ஸ்ரீ வேதாந்த தேசிகர் (1268- 1369) - ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்-750’ என்ற தலைப்பில் நூல் ஒன்று ‘இந்து தமிழ்’ குழுமம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.வில்லூர் நடாதூர் கருணாகராச்சாரியார், அனந்த பத்மநாபாச்சாரியார் ஸ்வாமி, டாக்டர். திருப்பூர் கிருஷ்ணன், முதுமுனைவர் ம.அ. வேங்கடகிருஷ்ணன், பேராசிரியர் தி. இராசகோபாலன் போன்ற அறிஞர்களின் கட்டுரைகள் இந்நூலுக்குச் சிறப்புச் சேர்த்துள்ளன.தேசிகரின் சிறப்பைப் பல்வேறு கோணங்களில் விளக்கும் வகையில் அத்திகிரி மான்மியம், மும்மணிக்கோவை, அருத்த பஞ்சகம், பிள்ளை அந்தாதி, அச்யுத சதகம், திருச்சின்னமாலை, ஸ்ரீபாதுகா சஹஸ்ரம், போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.வேதாந்த தேசிகரின் வாழ்க்கைச் சம்பவங்கள், நடாதூர் அம்மாள் அனுக்ரஹம், கருட, ஹயக்ரீவ அனுக்ரஹம், நூல்கள் இயற்றுதல், திவ்யதேச யாத்திரை, மாயாவாதி கர்வ பங்கம், கிருஷ்ணமிச்ரர், டிண்டிமரை வெல்லுதல், பாம்பாட்டியை அடக்குதல், கிணறு வெட்டுதல், பாதுகா சஹஸ்ரம் இயற்றுதல், சிற்பியை வெல்லுதல் என்று பல்வேறு நிகழ்வுகளை விளக்கும் விதமாக இந்த நூல் அமைகிறது.

You may also like

Recently viewed