Author: எஸ். ராமகிருஷ்ணன்

Pages: 384

Year: 2011

Price:
Sale priceRs. 375.00

Description

இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.

மகாபாரதம் இந்தியாவின் நினைவுத்திரட்டு, பலநூற்றாண்டு கால மனிதர்களின் நினைவும் ச்சுனவும் ஒன்று கலந்த மாபெரும் படைப்பு, காலத்தின் குரல் தான் கதையாக விரிகிறது.

ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது போலும், உபபாண்ட வலியும் அகத்துயரங்களும் கொண்ட தீவிர மன எழுச்சியால் எழுதப்பட்டது. வாசகர்களின் பரந்த வாசிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான உப பாண்டவம் புதிய நான்காவது பதிப்பாக வெளிவருகிறது

You may also like

Recently viewed