மூங்கில் மூச்சு


Author: சுகா

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 140.00

Description

தமிழ்ச் சமூகத்தில் நடந்த பல்வேறு கலாசார மாற்றங்களையும் போகிற போக்கில் சுகா பதிவு செய்துகொண்டு போகிறார்... அந்தக் காலத்தில் மத்தியதரக் குடும்பத்தில் அபூர்வமாக இருந்தன ரேடியோ பெட்டிகள். அவற்றில் ஒலித்த சிலோன் ரேடியோவும், ஒலிச்சித்திரங்களும் அந்தக் காலத்தை அப்படியே கண்முன்னே நிறுத்துகின்றன.நாங்கள் சிலோன் ரேடியோவின் மயில்வாகனனின் மதுரமிக்க குரலால் கவரப்பட்டவர்கள் என்றால்... சுகா, அப்துல் ஹமீதினாலும், கே.எஸ். ராஜாவினாலும், ராஜேஸ்வரி சண்முகத்தாலும் கவரப்பட்டவர். ரேடியோவின் காலம் முடிந்து டேப் ரிக்கார்டரின் கலாமும், பிறகு சி.டிக்களின் வரவும், ரத்தமும் சதையுமான மனித உறவுகளினூடே வெளிப்படுகின்றன. சின்னச் சின்ன வலிகளும், சின்னச் சின்னச் சந்தோஷங்களும் இந்தத் தொடரெங்கும் விரவிக்கிடக்கின்றன. மெலிதான நகைச்சுவையும்கூட உள்ளது.இது மூங்கில் விடும் மூச்சு மட்டுமே அல்ல... ஓர் இளைஞனின், ஒரு காலத்தின், ஒரு தலைமுறையின் சுவாசம்!- வண்ணநிலவன் மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள் தெரியும். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார். யாராவது நேற்றைய தேதியைக் கிழிக்கும்போது, உற்றுப் பார்க்கிறோமா? சிலேட்டை அழித்தபிறகு, அதில் ஏற்கெனவே எழுதியிருந்ததைப் படிக்க முடிந்திருக்கிறதா? ஆழ்வார்குறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் முப்பது வருடங்களுக்கு முன் அடித்த வேப்பங் காற்றில், இன்றைய சாலிக்கிராமத்து ஜன்னலின் வழி எட்டிப்பார்க்கிறவரின் சிகை கலையுமா? உதிரி மனிதர்களின் முகங்களால் நிரம்பி வழியும் ஓர் உயிர்ப்புமிக்க ஓவியத்தை, ஞாபகங்களின் கித்தானில் இவ்வளவு அற்புதமாக வரைய முடியுமா?வீட்டுப் பட்டாசலுக்குள், சினிமா தியேட்டர் ஊடாக, கோயில் பிராகாரத்தின் கல்பாளங்களில், ரதவீதி வழியாக எல்லாம் தாமிரபரணி என்கிற செல்ல நதியை ஓடவிட முடியுமா? சுகாவால் முடிந்திருக்கிறது. சுகாவால் மட்டுமே முடிகிறது என்பதே சரி.- வண்ணதாசன்

You may also like

Recently viewed