Description
பெண்களின் மீது சமூகம் திணிக்கும் பழமை வாதங்களை எதிர்த்துப் போராடும் படைப்பு. இந்நாவல் பற்றி அகிலன் ‘ இன்றைய இலக்கியம் நாளைய வழிகாட்டி. இந்நாவலில் ஆனந்தி பற்றிய என் கருத்தை எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. சிந்தித்துப் பார்த்தால் போதும். நாளைக்கு இந்தச் சமூகத்தில் மாணிக்கங்கள் போன்ற போலிகள் அண்ணாமலைகளுக்கும் ஆனந்திகளுக்கும் துரோகம் செய்து வாழ முடியாத சூழ்நிலை எற்பட இந்நாவல் சிறிதளவாவது தூண்டுதலாக இருக்க வேண்டுமென்பது என் நோக்கம் என்கிறார் அகிலன்.இம்மேம்பட்ட எண்ணமே சித்திரபாவையின் உயிர்நாடி.