Description
இந்திய சுதந்திரப் போரில் இரண்டு தலைமுறை இளைஞர்களிடம் தேசபக்திக் கனலையும் சுதந்திர தாகத்தையும் மூட்டிய நூல் வீர சாவர்க்கரின் “எரிமலை அல்லது முதலாவது இந்திய சுதந்திர யுத்தம்” . 1857 கிளர்ச்சியை சிப்பாய்க் கலகம் என்று பிரிட்டிஷார் வர்ணிக்க, அதனை முதல் சுதந்திரப் போர் என்று அடையாளப் படுத்தி வீர சாவர்க்கர் இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதினார். இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு முன்பே காலனிய பிரிட்டிஷ் அரசு அதைத் தடை செய்தது. பிறகு பல்வேறு புரட்சிகர போராட்டக் குழுக்கள் மூலம் இந்தியா முழுவதும் இப்புத்தகம் இளைஞர்களைச் சென்றடைந்தது.