நான் ஒரு அழைப்பு - பாகம் II


Author: ஓஷோ

Pages: 300

Year: 2006

Price:
Sale priceRs. 200.00

Description

காத்திருக்கக் கற்றுக்கொள் அமைதியாக, பொறுமையாய் இருந்து வாழ்விருப்பு உனக்கு எது அளித்தாலும் அதைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இரு. நீ செய்ய வேண்டியதெல்லாம் இன்னும் ஆழமாக தியானம் செய்வது, மனதைத் தாண்டி மௌனத்தில் ஆழ்ந்து, எந்த எண்ணமின்றி, எந்த வகை உணர்வுமின்றி, எந்த விதமான மனச் சலனமுமின்றி வெறுமனே அமைதியாக கவனமாகக் காத்திருப்பது மட்டுமேயாகும். வாழ்விருப்பு அப்போது எதற்கும் தயாராக நீ உள்ளாய் என்பதை அறிந்து கொள்ளும். பொலிவு வரும். ஆனால் அது வரும்போது ஒரு சின்ன முணுமுணுப்புக் கூட கேட்காது. திடீரென நீ அதை உணருவாய் அது உனக்குள் இருப்பதைக் காண்பாய். உனது அசைவுகளில் நீ அதை உணருவாய். உனது உறக்கத்தில் நீ அதை உணருவாய். உனது பேச்சில் நீ அதை உணருவாய். அனைத்து விதத்திலும் நீ அதனுள் மூழ்கடிக்கப்படுவாய். ஆனால் நீ உன் பங்கிற்குச் செய்ய வேண்டிய ஒரே விஷயம் ஆழ்ந்து காத்திருப்பதுதான். தியானம் கூர்ந்த கவனத்தை உருவாக்கும் நீ காத்திருக்கும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

You may also like

Recently viewed