Description
எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!தந்த்ரா ரகசியங்கள் - பாகம்-4 (விஞ்ஞான் பைரவ் தந்த்ராவின் புதிய விளக்கம்)- ஓஷோ; தமிழில்: தியான் சித்தார்த்; பக்.624; ரூ.300; கண்ணதாசன் பதிப்பகம், சென்னைதந்த்ராவின் ரகசியங்களைப் பற்றி முதன் முதலில் படிக்கும் வாசகர்களுக்காக, இந்நூலின் முதல் பாகத்தில் உள்ள "தந்த்ரா உலகம்' என்ற முதல் அத்தியாயம் இதில் இணைக்கப்பட்டுள்ளது."விஞ்ஞான் பைரவ் தந்த்ரா' என்ற வார்த்தைகளின் பொருள் "உணர்வு தாண்டிப் போகும் யுக்தி'. விஞ்ஞான் என்றால் உணர்வு; "பைரவ்' என்றால் உணர்வு கடந்த நிலை; தந்த்ரா என்றால் யுக்தி, வழி, முறை டெக்னிக். எனவே, இது விஞ்ஞானபூர்வமானது. விஞ்ஞானம் "ஏன்' என்பதில் அக்கறையுடையதல்ல; "எப்படி' என்பதில் அக்கறையுடையது என்று விளக்கமளிக்கிறது தந்த்ரா உலகம்.