மறைந்திருக்கும் உண்மைகள்


Author: ஓஷோ

Pages: 247

Year: 2010

Price:
Sale priceRs. 300.00

Description

பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வந்திருக்கின்றன. அந்தப் புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்பது இந்தக் கோயில்களின் சக்திச் சூழலைக் கெடுப்பதுதான்.சக்தித் துடிப்புள்ள கோயில்கள் அழிந்தால், கீழை நாட்டுக் கலாச்சாரம் தகர்ந்து போகும்.
இன்றைய மக்களுக்குக் கோயிலின் மதிப்புத் தெரியவில்லை. பள்ளி கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு மொழியும், தர்க்கமும் கற்றுக் கொடுக் கப்படுகிறது. - அதனால் அறிவு வளர்கிறதே தவிர, இதயம் மூடித்தான் கிட க்கிறது. உயிர்த்துடிப்புள்ள கோயிலின் மகிமை இன்றைய மனிதருக்குத் ெ தரியவில்லை. அதன் அர்த்தமும் புரியவில்லை. இதனால், நமது கோயில்கள் மெல்ல மெல்ல தம் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன.
கோயில்கள் மீண்டும் உயிர்த்துடிப்பு பெறாதவரை இந்தியா இந்தியாவாக இராது. இந்தியாவின் இரசவாதம் முழுவதும் கோயில்களில்தான் இருக்கின்றன. இந்தியா எல்லாவற்றையும் கோயில்களிலிருந்தே பெற்றது. ஒரு காலத்தில், மனிதனுடைய வாழ்வில் நிகழ்வன எல்லாமே, கோயிலோடு தொடர்பு கொண்டதாக அமைந்திருந்தது.

You may also like

Recently viewed