Description
ஆங்கில நாவலாசிரியை அகதா கிறிஸ்டி எழுதிய "வெளிறிய குதிரை' "பஏஉ டஅகஉ ஏஞதநஉ' என்ற நாவல், நடந்து முடிந்த இரு சம்பவங்களின் மர்மத்தை அறிய உதவியது என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா?
ஆம்! ஆப்பிரிக்காவில் இருந்து லண்டனுக்கு ஒரு பெண்ணை சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். எவ்வளவு சிறந்த சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. ஆறாவது நாள் அப்பெண்ணின் தலைமுடி கொத்து கொத்தாகக் கொட்டத் தொடங்கி, மாலையில் முழு வழுக்கையானாள் அவள். மருத்துவர்களுக்கே ஒன்றும் புரியவில்லை. அவருக்குத் துணையாய் இருந்த செவிலிப் பெண்மணி தனது சந்தேகத்தை மருத்துவர்களிடம் தெரிவித்தாள். அவர்கள் சோதித்தபோது எல்லாப் பிரச்னைகளுக்கும் "தாலியம்' என்ற வேதிப்பொருள்தான் காரணம் என்பதை உறுதி செய்தனர்.