Description
அள்ள அள்ள குறையாத அமுத சுரபி இருந்தாலும், அடங்காத ஆசை வானத்தை எட்டிப்பிடிக்க தாவி பறக்குமே அன்றி, இருப்பதை வைத்து திருப்தி கொள்ள பார்க்காது. இன்னும் வேண்டும் என்ற ஆசை, இது போதாது என்ற பேராசை கொண்ட மனிதர்கள் உலக வீதியில் நாலாபுறத்திலும் இருப்பதை நாமறிவோம். ஆயினும் அடிப்படை தேவைக்கு கூட வசதியும், வாய்ப்பும் இல்லாமல் அல்லாடும் ஜீவன்களை அன்றாடம் பார்க்கிறோம் லட்சக்கணக்கில்.காரும், பங்களாவும் வேண்டுமென்று ஆசைப்படவில்லை. அந்த அப்பாவி ஜீவன்கள் பசிக்கும் பட்டினிக்கும் உணவும், உடம்பை மறைக்க ஆடையும், வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க ஒரு குடிசை வேண்டுமென்று நியாயமாக விரும்புகிறார்கள். அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. வாழ்வதற்கு திண்ணை கூட இல்லாமல், பல்லாயிரம் பேர்கள் தவிக்கும் போது ஒரு மனிதனுக்கு ஒன்பது வீடுகள் இருக்கிறது. இது சமுதாயத்தின் சீர்கேடா? இயற்கையின் சாபமா? ஆண்டவ