ஸ்ரீ பாதுகா ஸகஸ்ரம்


Author: K. ஸ்ரீதரன்

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 300.00

Description

இந்த நூல் 32 பத்திகளாகப் (அடிவைப்பு) பிரிக்கப்பட்டு, மிக எளிய பழகு தமிழில் விளக்கப்பட்டுள்ளது, மேய்ச்சலுக்குச் சென்ற தாய்ப்பசு கன்றின் ஞாபகம் வர மாலை நேரத்தில் விரைவாக கன்றிடம் ஒடி வருவது போல பாதுகையும் சித்திரகூடத்திலிருந்து ( ராமனிடமிருந்து) அயோத்திக்கு ஓடிவந்ததை படிக்கும்போது, மகாதேசிகரின் கற்பனைத்திறன் கண்டு வியக்கிறோம். ( பக்கம் 74). அயோத்தியை, பாதுகைகள் ஆண்ட போது ( பரதன் ஆண்ட 14 ஆண்டுகளில்) எந்த குழந்தையும் இறக்கவில்லை; பிராய்ச்சித்தம் தேடும் அளவிற்கு எவ்வித குற்றமும் நிகழவில்லை என்ற செய்தி ( பக்கம். 80 ) யை சுலோகம் 153ல் காணும்போது, தற்போது அந்த பாதுகைகள் ஆட்சி செய்யக்கூடாதா என்ற ஏக்கமே நமக்கு உண்டாகிறது. பாதுகைகள், சீதாதேவியால் வணங்கப்பட்டதற்கான காரணங்களை 229,230 சுலோக விளக்கவுரையில் படித்து மகிழலாம். ( பக்கம்.104 ) எல்லா விஷ்ணு ஆலங்களிலும் உள்ள விக்ரக வடிவங்களில் பாதுகையுடன் கூடிய எம்பெருமான் திருமேனியை காண இயலாது; ஆனால், திருவரங்கத்தில் மட்டும் பாதுகையுடன் கூடிய திருமேனியைக் காணலாம் என்ற செய்தியை, சுலோகம் 240ல் ( பக்கம்.107) படித்து ரசிக்கலாம்.

You may also like

Recently viewed