Description
அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுடைய தளராத முயற்சி யாலும், அவருடைய அருமை மைந்தரான டாக்டர் தணிகை மணி, வ.சு.செங்கல்வராய பிள்ளை அவர்களது சிறந்த தொண்டின் பயனாலும் திருப்புகழ் நமக்குக் கிடைத்திருக்கிறது.

