சிவஞானபோதம்: வழித்துணை விளக்கம்


Author: A. ஆனந்தராசன்

Pages: 700

Year: 2011

Price:
Sale priceRs. 420.00

Description

இந்நாட்டில் தோன்றி வழங்கி வரும் தத்துவத்துறை நூல்களுள் தலைசிறந்த அறிவுநூலாக விளங்குவது சிவஞான போதம் ஆகும். இந்நூல் அளவிற் சிறியது; சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையது; அளக்கலாகா மலையையே தன்னுள் அடக்கிக் காட்டும் ஆடி போல அறிவு நூல்களின் பொருளனைத்தையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு நிற்பது ; சித்தாந்த சைவத்தின் முப்பொருள் உண்மைகளை எடுத்து முறைப்படுத்தி வழங்குவது. இந்நூல் பன்னிரண்டு நூற்பாக்களால் ஆனது. நூற்பாக்கள் மூன்றடி அல்லது நான்கடி உடையன. நூற்பாக்களில் உள்ள மொத்த அடிகள் நாற்பது. நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் செய்த பாயிரம் உள்ளது. அதில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றும், அவையடக்கச் செய்யுள் ஒன்றுமாக இரண்டு செய்யுட்கள் உள்ளன. சித்தாந்தப் பொருள்களைப் பெத்தம், முத்தி என்னும் இரு நிலைகளில் வைத்து விளங்க உணர்த்தும் விழுமிய நூல் சிவஞான போதம்.

You may also like

Recently viewed