Description
ஐந்து பூதங்களிலேயே பிரதானமானது காற்று, காற்றின் வழியாக ஆகாச சக்தியாகிய பிராண சக்தி உடலில் பரவி உடலை இயக்குகிறது. காற்றின் வழியாக ஒளிமயமான தேயு சக்தி உடலில் பரவி சரீரத்தில் வேலை செய்கிறது. காற்றின் வழியாக அப்பு சக்தி சரீரத்தில் பரவி உடலில் இயங்குகிறது. காற்றின் வழியாக பிருதிவி சக்தி உடலில் பரவி சரீரத்தை இயக்குகிறது.