Description
திருமந்திரம் ஒரு சித்தன் செந்தமிழில் பாடிய வாழ்வியல். இந்நூல் அதன் சாரம். 3000 பாடல்களின் முத்தான கருத்துகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. திருமூலர் மூன்றாம் நூற்றாண்டினர் என்றும் ஐந்தாம் நூற்றாண்டினர் என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. ஆனால், அவர் எழுதிய திருமந்திரம் ஒரு மகத்தான படைப்பு என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருகக முடியாது. உடல் - மனம் - ஆன்மா பற்றி இதைவிடத் தெளிவாகவும் விரிவாகவும் உரைக்கக்கூடிய நூல் தமிழில் இல்லையென்றே சொல்ல வேண்டும். இது ஒரு முனிவரின் ஞானத்தெளிவு; ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் அவரளித்த பரிசு.