Description
இந்தக் கவிதைத் தொகுப்பில் சிவக்குமாரின் (இப்புத்தகத்தின் ஆசிரியர்) கவிதைக் குரல் ஒரு தனித்த குரல். புதுக்கவிதையின் வீரியமான மரபுகளை சுவீகரித்துக் கொண்டு, தன் ஆளுமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தன் இயல்புகளைக் கவிநயங்களாக்கி இயல்புக்கு மாறானவற்றை அவற்றின் விமர்சனத்தோடு, ஆனால் கவிதைத் தன்மை மாறாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். பதினான்கு வருடங்கள் எழுதி வந்த கவிதைகளை தேர்வு செய்து காத்திரமான தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே ஆங்காங்கே படித்தவை என்றாலும், தொகுப்பாக படிக்கும்போது ஒரு நிறைவான கவிதானுபவம் கிடைக்கிறது. வேற்று ஓசைகளையும், கூறியது கூறலையும் தவிர்த்து சொல் புதிது, பொருள் புதிது என்று வாசகர்கள் உணரும் வகையில் பதிவு செய்திருக்கிறார்.