Description
கல்லூரி வகுப்பை கட்டடித்துவிட்டு, சினிமா பார்க்கப்போன நான்கு மாணவர்களுக்கும், பண்டைய கிரேக்க தத்துவ ஞானியான சாச்ரடீசுக்கும், கட்ரீனா புயலில் மாட்டிக்கொண்டு தவித்த நோயாளிகளுக்கும், ஐன்ஸ்டைன் தனது ட்ராம் வண்டியில் இருந்து பார்த்த சுவிட்சர்ந்திலாந்திலிருக்கும் மணிக்கூண்டுக்கும் என்ன தொடர்பு? இவை எல்லாமே வெவ்வேறு சிந்தனைச்சோதனைகளில் தலையை காட்டும் விஷயங்கள் என்பதுதான் அந்த சம்பந்தம். அறிவியல், பொருளாதாரம், ஜனநாயகம், மருத்துவம், நீதி தர்ம நெறிமுறைகள், கணினியியல், கணிதம், என்று பற்பல துறைகளில் சிந்தனைச்சோதனைகளின் மூலம் பிரச்சினைகளை அணுகுவதும், புரிந்து கொள்வதும், விடைகளைக் கண்டு பிடிப்பதும் எப்படி என்று விளக்கத் தயாராய் நிற்கிறது இந்தப் புத்தகம். படிக்கிற சாக்கில் ஒரு பைசா செலவில்லாமல் பிரபஞ்சம் முழுவதையும் உங்கள் சாய்வு நாற்காலியில் இருந்தே சுற்றிப்பார்த்து விடலாம். உற்சாகமாய் இந்தச் சிந்தனை வண்டியில் ஏறுங்கள்.