Description
தமிழர்களின் பண்பாடும் நாகரிகமும் மிகவும் தொன்மையானது. பன்னெடுங்காலத்திற்கு முன்பே அவர்கள் அகப்புற வாழ்வில் சிறந்தோங்கி இருந்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள நம் பண்டைத் தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தெள்ளத் தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
தொன்மைக் காலத்தில் வாழ்ந்த மக்களின்
வாழ்க்கை, அரசியல் மற்றும் இசை, கூத்து, ஓவியம், சிற்பம் முதலிய கலைகள்; பல்லவர், சோழர், நாயக்கர் முதலியோர் காலத்தில் நிலவிய அரசியல்; பெளத்தம், சமணம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய சமயங்களின் வரலாறும் வளர்ச்சியும்; அக்காலச் சமூகச் சூழல்கள், கலைகளின் வளர்ச்சி, நீதித்துறையின் வரலாறு, மருத்துவக் கலைகள், தமிழ் நாட்டு அரசியலில் விதிக்கப்பட்டிருந்த வரிகள், தமிழகக் காசுகளின் வரலாறு, சங்க காலத்திற்குப் பிறகு தோன்றிய சாதிகளின் வளர்ச்சி, சாதி ஒழிப்பு முயற்சிகள், மராட்டியர்கள் செய்த நன்மைகள், மார்க்கோபோலோ கண்ட பாண்டிய நாடு பற்றிய நிலை, இடைக்காலக் கோயில்களின் பணிகள், கட்டடக் கலையின் வளர்ச்சி, நாட்டுப்புறப் பாடல்கள், அக்கால மக்களிடம் வழங்கிவந்த சொலவடைகள், பழமொழிகள், திருவிழாக்கள் என அனைத்தும் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட வேண்டிய இந்நூல், பனிரண்டாவது பதிப்பு கண்டிருக்கிறது என்றால், இதன் சிறப்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.