கிருபானந்தவாரியாரின் தமிழ் அமுதம்


Author: பெ.கு. பொன்னம்பலநாதன்

Pages: 256

Year: 2013

Price:
Sale priceRs. 125.00

Description

அறுபத்து நான்காவது நாயன்மார் என்று சைவப் பெருமக்களால் பாராட்டப்பட்ட கிருபானந்தவாரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவையாகச் சொல்லும் நூல். வாரியார் தனது ஒன்பதாவது வயதிலேயே மேடையேறிப் பேசியதும், பன்னிரண்டாவது வயதிலேயே பத்தாயிரம் பாடல்களை மனப்பாடமாகப் பயின்றதும் மைசூர் சென்ற வீணை வாசிக்கக் கற்றக்கொண்டதும் சுவையான தகவல்கள். சைவ, வைணவ நூல்களைப் பயின்றதைப் போலவே, வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள் போன்றவற்றையும் அவர் ஆழ்ந்து பயின்றிருக்கிறார். வாரியார் பேச்சிலிருந்து பல இடங்களில் மேற்கோள்கள் காட்டப்பட்டிருப்பது சிறப்பு. குறிப்பாக பழமொழிகளின் உண்மையான பொருள், நுட்பமான சொல்லாடல் (வணங்குதல், தொழுதல் வேறுபாடு) இரு பொருள் பட உரைத்தல் (சூரபன்மன் கொடியவன், பின்னர் கொடி அவன் ஆனான்), நகைச்சுவையாகப் பேசுதல் (சூரிய கிரகணம், சந்திரகிரகணம் பிடித்தால் விடும். பாணிக் கிரகணம் பிடித்தால் விடாது) போன்ற பலவற்றைக் கூறலாம். நூலைப் படித்து முடித்ததும் கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவைக் கேட்டு முடித்ததுபோல் இருக்கிறது.

You may also like

Recently viewed