Description
ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமையை, இந்தியா பெறக்காரணமான புகழ் பெற்ற விஞ்ஞானி. கலாம் வாழ்வில் ஏழு திருப்பு முனைகள் அல்லது சவால்கள் உண்டு. கலாம், ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறியதையும் சேர்த்துக்கொண்டால், அந்தத் திருப்புமுனைகள் எண்ணிக்கை எட்டாக உயர்கிறது. அந்தத் திருப்பு முனைகள் பற்றியெல்லாம் விரிவாக வர்ணிக்கிறார். நம் இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டக்கூடிய அருமையான புத்தகம். அனுபவப் பொக்கிஷம். எஸ். குரு. நன்றி: தினமலர், 3, மார்ச் 2013.