Description
தென்னாட்டுப் பாண்டிய பரம்பரையைச் சேர்ந்தவர், அதிவீர ராம பாண்டியன். இவர், கொற்கையைத் தலை நகராகக் கொண்டு, தென்பாண்டி நாட்டை ஆண்டு வந்தார். தமிழ், சமஸ்கிருதம் முதலான மொழிகளில் புலமை பெற்றவர். வெற்றி வேற்கை என்னும் நீதி நூலை இயற்றியவர். அவர் எழுதிய நைடதம், நளன் வரலாற்றை இலக்கியச் சுவையோடு அறிவித்தது. அந்த நைடதத்திற்கு எழுதப்பட்ட உரை நூலின் வடிவம் தான், இந்த நூல்.இருபத்தெட்டுப் படலங்களோடு, 1,170 பாடல்களுடன், அழகிய காப்பியமாகத் திகழ்கிறது நைடதம். ஆசிரிய விருத்தம், கலித்துறை முதலான பல்வேறு பாவினங்களில் அமைக்கப்பட்டுள்ள, நைடதத்திற்கு எளிய தெளிவுரையையும், அரும்பதவுரையையும், குறிப்புரையையும் இந்த நூல் வழங்குகிறது. நளன் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு, இது ஒரு அருமையான கையேடு.