தேவதாசியும் மகானும்


Author: வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம்

Pages: 216

Year: 2012

Price:
Sale priceRs. 275.00

Description

நாகரத்தினம்மா நமக்கு விட்டுச் சென்றிருப்பதுதான் என்ன? வாழ்க்கைத் தரத்தில் கீழ்மட்டத்திலிருந்து தன்னுடைய அயராத உழைப்பு மற்றும் திறமையினாலேயே சிகரங்களை அடைந்தவர் அவர். கணக்கில்லாத பேரும் புகழும் பணமும் சம்பாதித்த பிறகும் தம் வெற்றிகளின் மீது சாய்ந்து ஓய்வெடுத்துவிடாமல் தமது ஆசைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றத் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தவர். சங்கீத உலகில் பெண்கள் ஆண்களுக்குச் சமம் என்பதை நிலைநிறுத்தத் தம் ஆயுட்காலம் முழுக்க உழைத்தார். பிற்பட்டதாகக் கருதப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருந்த போதிலும் சுயபச்சாதாபம் என்னும் சகதியில் உழன்று மற்றவர்களிடம் உதவியை நாடாதவர். அதற்கு மாறாக, தமது பின்னணியைப் பற்றிய பெருமிதம் அவருக்கு இருந்தது. உலகம் தம்முடைய மதிப்பைக் கண்டு, தம்முடன் பழகுவதைப் பெரும் பேறாகக் கருத வைத்தார். தூற்றப்பட்ட தேவதாசி என்ற நிலையிலிருந்து உயர்ந்து இறுதியில் ஒரு புனிதரின் நிலையை அடைந்தார்.

You may also like

Recently viewed