Description
இந்திய துணைக் கண்டத்தின் மிக முக்கிய இஸ்லாமியத் தலைவர்களுள் முதன்மையானவர் ஜின்னா. இத்தனைக்கும் அவர் முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரையை மேற்கொண்டதில்லை, தன் உயிலைக் கூட இஸ்லாமிய முறைப்படி எழுதியதில்லை; மசூதிக்குப் போவதை வழக்கமாகக் கொண்டதில்லை; உருது அவருக்குத் தெரியாது; குரானுக்கும் அவருக்கும் வெகுதூரம்; இஸ்லாமிய மரபுப்படி உடையணிந்ததில்லை; அவரது மனைவி ஒரு பார்ஸி; அவரது மருமகன் ஒரு கிறிஸ்தவர்; அவரது சுருக்கெழுத்தாளர் பாலக்காடு பிராமணர். அவரது அரசியல் வழிகாட்டி தாதாபாய் நெளரோஜி எனும் முஸ்லிம் அல்லாதவர். ஆனால், இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக ஜின்னா விளங்கினார்! அது எப்படி சாத்தியமாயிற்று? இந்தக் கேள்விக்கான பதில்தான் இந்தப் புத்தகம். பல்வேறு அத்தியாயங்களில் இந்தக் கேள்விக்கான பதிலை அலசியிருக்கிறார் நூலாசிரியர்.