Description
வடகிழக்கே பிரம்மபுத்திரா நதியின் போக்கில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறது அனுபவங்களின் நிழல் பாதை. ரங்கையா முருகனும் ஹரி சரவணனும் இந்நூலை எழுதியுள்ளார்கள். அங்குள்ள மக்களின் ஆடை, அணிகலன், கலைவடிவங்கள் என்று பல விஷயங்களும் பதிவாகியுள்ளன. இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்வு அவர்களுடையது.வாழுமிடத்தில் என்ன கிடைக்கிறதோ அதை வைத்தே தங்கள் வாழ்க்கை முறையை, குடியிருப்புகளை அவர்கள் வடிவமைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் வாழ்வோடு ஒப்பிடுகையில் ஒருபுறம் பெரு நிறுவனங்கள் இயற்கையைத் திட்டமிட்டு அழிக்கின்றன. இன்னொருபுறம் சாதாரண மக்கள். இயற்கைக்கு எதிராக இருப்பது தெரியாமலே அழிக்கிறோம். இந்த பயண அனுபவ நூல் நாம் அனைவருமே படித்தறிய வேண்டிய ஒன்று. , - இயக்குநர் மணிவண்ணன் அந்திமழை, 25.10.2012.