Description
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்ற பெருமை பெற்ற வேதங்களில் இருந்து ஆச்சரியமான விஷயங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார், ஆசிரியர். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு தடம் அமைத்துக் கொடுத்தது வேதங்களே என்பது அசைக்க முடியாத ஆதாரங்களோடு எடுத்து வைத்து இருப்பது வியக்க வைக்கிறது. விமானம், ஹெலிகாப்டர், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை அன்றே கையாளப்பட்டு இருந்தன என்பதை பழங்கால நூல்களின் துணையோடு உறுதிப்படுத்தி இருப்பதோடு, அன்றைய காலத்தில் சிறந்து விளங்கிய கலைகள், சான்றோர்கள், பெண் ரிஷிகள் ஆகிய அனைத்துத் தகவல்களும், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டும் இன்றி அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டியவை ஆகும். - பரக்கத், துக்ளக், 20.3.2013.