Description
யமுனா ராஜேந்திரன் ஈழப்போராட்டம் தொடர்பாக சர்வதேச அரசியல் பின்புலத்தில் வைத்து எழுதிவரும் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். 54 கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல், விடுதலைப் போரின் படிப்பினைகள், சாதியம், இலங்கை முஸ்லிம்கள் பிரச்னை, ஈழப் பிரச்னையில் மார்க்சிஸ்ட்களின் அணுகு முறை, அறிவுஜீவிகள், அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகள், மனித உரிமை சார்ந்த பிரச்னைகள், ஈழப் போராட்டம் தொடர்பான ஆவணப் படங்கள், முள்ளி வாய்க்காலுக்குப் பிந்தைய ஈழ அரசியல் என மிக விரிவான தளத்தில் பல்வேறு விவாதங்களை முன்னெடுக்கிறது. ஈழப் போராட்டத்தின் அழிவையும் ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தையும் பற்றிய ஆழமான பார்வைகளை உருவாக்கும் முக்கியமான ஆவணம் இது. - - குங்குமம், 18.3.2013.