Description
பூமியில் உயிரினங்களின் தோற்றம் தற்செயலாக ஏதோ விபத்து மாதிரி நிகழ்ந்ததா? பரிணாம வளர்ச்சியில் உருவான மனித இனம் பூமியில் மட்டும்தான் வாழ்கிறதா? அல்லது இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் கோடானு கோடி கிரகங்களில் எதிலாவது வேறு உயிரினங்கள் உண்டா? | மனித இனத்தை அரித்துக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை! இன்னொரு பக்கம், இந்த உலகத்தின் எதிர்காலம் குறித்து ஒவ்வொருவரும் வேறுவேறு விதமாகச் சொல்லும் ஹேஷ்யங்கள் பலரையும் குழப்புகின்றன. 2000மாவது ஆண்டில் உலகம் அழிந்துவிடும்! என்று முன்கூட்டியே சிலர் ஜோசியம் சொன்னபோது அதை நம்பி நடுங்கியவர்கள் ஏராளம். இந்தக் கேள்விகள், குழப்பங்களுக்கிடையே பூமியைப் படிக்க பலர் தவறிவிட்டார்கள். இந்த பூமியில் பரவிக் கிடக்கும் இயற்கையின் சொத்துக்களிலிருந்து நாம் தினம் தினம் எத்தனையோ பொருட்களைப் பெற்றுக்கொண்டு இருக்கிறோம். அதற்குப் பதிலாக இந்த உலகத்துக்கு நாம் என்ன கைம்மாறு செய்கிறோம்?ஒ என்று யோசித்துப் பார்த்தாலே போதும்... நாம் இந்த உலகத்துக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறோம் என்பது புரியும். பூமியும் உயிரினங்களும் உருவான வரலாறு, பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை, இயற்கைச் சீற்றங்கள்,