வீழ்வேனென்று நினைத்தாயோ?


Author: சி. மகேந்திரன்

Pages: 200

Year: 2012

Price:
Sale priceRs. 100.00

Description

உயிர் பிழைக்க வேண்டும் என்ற உச்சக்கட்ட அவசரத்தில் அப்பாவி மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்! சிதறிய உடல்கள், சாலைகளில் ஒட்டியிருக்கும் சதைகள், உணர்வுகளற்று ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்கள்... என, மூச்சிரைத்து வந்த சமூகத்தின் முனகல் சத்தமே அங்கு பேரவல ஒலியாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது! கை, கால், முகம் என காயம் ஆறாத இளம் பெண்கள், ரணம் கண்டு கத்திக் கத்திச் சோர்ந்துபோன குழந்தைகள், குழந்தைகளின் தாகம் தணிக்க முடியாத தாய்மார்கள், மனைவியின் மானத்தைக் காக்க முடியாத கணவன்மார்கள்... துயரம் தோய்ந்த அந்தச் சமூகத்தில் பலியான உயிர்களின் எண்ணிக்கை, இலக்கங்களால் வரையறுக்க முடியாது! கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அவர்கள் இடம் பெயர்வதற்கான காரணம், அதில் இலங்கை அரசின் சூழ்ச்சி, இடப்பெயர்வின்போது ஏற்பட்ட இன்னல்கள், போராட்டங்கள், உடைமையும் உணர்வையும் இழந்து உயிரைக் காக்க அவர்கள் பட்ட பாடு... இப்படி, முள்வேலி முகாம்வாசிகளின் அவலங்களை மூடி மறைக்கும் இனவெறி அரசின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.மகேந்திரன். ஈழத் தமிழ் அகதிகளின் அன்றாட வேதனைகளை வேர் அறுக்கும் முயற்சியாக

You may also like

Recently viewed