Description
தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் பூத்தாலும் அதில் தனி முத்திரையைப் பதிக்கத் தவறாதவர்.