Description
இந்திய மண்ணில் உருவான பழமையான மருத்துவ முறை ஆயுர்வேதம். நமது பாரம்பரியத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்தது இது.நோய் என்பது உடல் பாதிப்பால் மட்டும் வருவதில்லை எனக் கருதும் ஆயுர்வேத வைத்தியர்கள் உடல், மனம் மற்றும் ஆன்மிகத் தன்மைகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்து சிகிச்சை தருகிறார்கள். இந்த நோய்க்கு இன்ன மருந்தைக் கொடுங்கள் என்று சிம்பிளாகச் சொல்லிவிட்டு நகராமல், நோய்களே வராமல் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதைக் கற்றுத்தரும் அற்புத மருத்துவம்தான் ஆயுர்வேதம்.ஆயுர்வேதத்தின் அற்புத குணமே அது கற்றுத் தரும் வாழ்க்கை முறைதான். பிள்ளைப் பேறில் ஆரம்பித்து குழந்தை வளர்ப்பு, இளம்வயதில் பிள்ளைகளை நடத்தும் முறை, திருமணம், உணவு, தூக்கம், வேலை, தாம்பத்ய நெறி, வயதான பிறகு உடலை எப்படி புத்துணர்வு பெற வைப்பது என எல்லாவற்றையும் பற்றி விலாவாரியாக கற்றுத்தரும் வாழ்க்கை வேதம் அது! கிட்டத்தட்ட மூன்றாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட இந்த விஷயங்கள் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்துவதாக இருப்பதுதான் இதன் அதிசயம்.உணவே மருந்து என்பதைத்தான் முக்கியமாக இந்த வேதம் வலியுறுத்துகிறது.