Description
மீண்டும் குழந்தையாகிற ஆசை யாருக்குத்தான் இல்லை! நிலா பார்க்கக்கூட நேரமில்லாமல், அவசரமும் தீராத தேவைகளுமாய் ஓடிக்கொண்டே இருக்கிற இந்த உலக வாழ்க்கையிலிருந்து தப்பித்துச் சென்றுவிட ஒரு மாயக் கம்பளம் கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் எல்லோரிடமும் உண்டுதானே? சதா வாகனங்கள் இரைந்து கொண்டே இருக்கிற தார்ச்சாலை சட்டென்று ஒரு புல்வெளியாக மாறிவிடாதா? வண்ணங்கள் மாறிமாறி துரத்திக்கொண்டே இருக்கும் சிக்னல்கள் பொசுக்கென்று ஒரு மரமாகி பூத்துவிடாதா? இப்படிப்பட்ட கனவுகள் இல்லாதவர்கள்தான் யார்?நம் எல்லோருக்காகவும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுப்பியிருக்கிற சுவாரஸ்யமான கனவு நகரம்தான் ஏழுதலை நகரம்!காசு கொடுத்து கிளியைப் பேசச் சொல்லும் நமது உலகிலிருந்து முற்றிலும் மாறுபட்டது ஏழுதலை நகரம். அங்கே இயல்பாகவே பேசும் பறவைகள் வாழ்கின்றன. உதிராத பூக்கள் சிரிக்கின்றன. மழைக்கால சாயங்காலத்தில் வந்து போகும் வானவில்லைப் போல சுவடுகள் இல்லாமலும், காற்றைப் போல சுமைகள் இல்லாமலும் அதிசய மனிதர்கள் வந்து போகிறார்கள். அடுக்கடுக்கான அதிசயங்களும் ஏராள ஆச்சரியங்களும், முடியாத சுவாரஸ்யங்களும், அழகிய புதிர்களும் சாகஸங்களுமாய் நீளும் ஏழுதலை நகரம்.