Description
புது வருடமான 2000, இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும் நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ஆரம்பித்துவிட்ட உணர்வு பிறந்து, உலகமே அதை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே, இந்தப் புத்தாயிரத்தைப் புதுமையான முறையில், அதேசமயம் விகடன் வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையில் எப்படி வரவேற்கலாம் என யோசித்தோம். சரித்திரம் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதை சுவைபடக் கூறினால் வாசகர்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை நிறைய உண்டு. அந்த வகையில், கடந்த நூறு ஆண்டுகளில் உலகில் நடந்த முக்கிய சரித்திர நிகழ்வுகளைத் தொகுத்து வரலாற்றுத் தொடர் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம். 100 வாரங்கள் _ அதாவது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, புது மில்லினியத்துக்கு வரவேற்புக் கூறும் விதமாக