ஆதிமங்கலத்து விசேஷங்கள்


Author: க.சீ. சிவகுமார்

Pages: 100

Year: 2019

Price:
Sale priceRs. 120.00

Description

ஆதிமங்கலம் என்ற கற்பனை கிராமத்துக்குள் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகமாகும்போது என்னென்ன கூத்தெல்லாம் நடந்தன என்பதே இந்தப் புத்தகத்தின் சாரம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் தெறித்துத் தெறித்துச் சிரிக்கவைக்கும்!நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதுவதற்கு கூர்ந்த கவனிப்பும் தனித்துவமான நடையும் வாழ்க்கையின் மீது புகார் இல்லாத மனநிலையும் வேண்டும்.சர்க்கஸில் கோமாளியைப் பார்த்துச் சிரிக்கிறோம். பல கோமாளிகள் மற்ற சாகச வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பவராக இருப்பார்கள்! அதைப் போல நகைச்சுவையாக நகரும் ஆதிமங்கலத்து விசேஷங்கள், தீவிரமான விஷயங்களையும் நுட்பமாக சுட்டிக்காட்டிச் செல்கிறது. மோட்டார் பைக்கைப் பார்த்து அலறியடித்துக் கொண்டு ஓடும் கிராம மக்கள், திரையில் சண்டையிடும் கதாநாயகனையும் வில்லனையும் விலக்க முயற்சிக்கும் பஞ்சாயத்துத் தலைவர்... என அறிவியல் சாதனங்கள் கிராமத்துக்குள் நுழையும்போது உண்டாகும் அனுபவங்களை வரிக்கு வரி சிரிக்கும்படி எழுதி இருக்கிறார் க.சீ.சிவகுமார்.அத்துடன், ஒளியன், கறியுண்ணி போன்ற புதிய சொல்லாக்கங்களை ஆங்காங்கே தெளித்திருப்பதும் புதுமை.

You may also like

Recently viewed