Description
குயிலி என்னும் குயிலின் கீதம் இது. ஒரு திரைப்படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களோடும் விறுவிறுப்போடும் எழுதப்பட்ட பொன்னிவனத்துப் பூங்குயில் வெறும் கதையல்ல... நிஜங்களும் சரிவிகிதத்தில் கலந்து படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காவியம்! குயிலி தன் கூட்டாளிகளோடு தஞ்சை மண்ணில் நடத்துகிற சேட்டைகளைப் படிக்கும்போது, நாமும் அவர்களுடன் குதித்துக் கும்மாளம் போடலாம்.புகழ்மிக்க கதாநாயகனுக்கே உரிய தகுதியோடு, இளவரசர் பிரதாபசிம்மன் வெவ்வேறு வேடங்கள் தரித்து, தன்னை வெளிக்காட்டாமல் நடத்தும் நாடகங்களில், நாமே வேடமிட்டு உலா வரும் உணர்வு ஏற்படுகிறது.காவிரி பற்றிய வர்ணனையில் சிலிர்ப்பும் பிரமிப்பும் தோன்றுகிறது. பயணம் செல்லும்போது காவிரி குறுக்கிடும் இடங்களில், சில்லிடும் சாரலில் நம்மை இழந்து பாலம் கடக்கும் நாம், இந்தக் கதையைப் படித்தபின், காவிரி அன்னையை கண்களில் வழியும் நீரோடு வழிபடுகிறோம்.