Description
ராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான். வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா நாம் பட்டுவிட்டோம் என்று மனதை தேற்றிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட அசாத்திய கஷ்டம் ராமனுக்கு நிவர்த்தியாகத் தொடங்கியது சுந்தர காண்டத்தில்தான். ராமனின் அனுக்ரஹம் பெற்ற பராக்கிரமசாலி அனுமன், கண்டேன் சீதையை என்ற உயிர்ச்சொல்லால் ராமனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த, அவன் பட்ட கஷ்டங்களையும், அவற்றை எதிர்கொண்டு, எதிர்ப்பு சக்திகளைத் தூள் தூளாக்கி அதன்பின் அடைந்த வெற்றிகளையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று மனோதிடம் கூறும் பகுதிதான் சுந்தர காண்டம். அவள் விகடனில், சுந்தர காண்டத்தை இந்திரா சௌந்தர்ராஜன் சிந்தனைச் சிறப்போடு எழுதி வந்ததை வாசகர்கள் படித்து பெரிதும் மகிழ்ந்தார்கள்.