Description
இந்து மதத்தில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவை மகத்தான இதிகாசங்கள். அவற்றுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படுபவை புராணங்கள். அப்படிப்பட்ட புராணங்களில் பழைமையும் புனிதமும் வாய்ந்தது ஸ்ரீமத் பாகவதம். உலக நன்மையின் பொருட்டு பத்து அவதாரங்கள் எடுக்கிறார் மகாவிஷ்ணு. அவற்றில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் விரிவான வருணனை, சிவ, ஸ்காந்த புராணத்திலிருந்து பல கதைகள் என இந்தியாவில் பழக்கத்தில் இருந்துவந்த அனைத்து ஆன்மிகக் கதைகளின் மாபெரும் தொகுப்பு ஸ்ரீமத்பாகவதம். முனிவர் ஒருவரின் சாபத்தினால் ஏழு நாட்களுக்குள் தான் இறக்கப்போவது நிச்சயம் என்பதைத் தெரிந்து கொள்கிறார் பரீட்சித்து மகாராஜா. மரிக்கப் போகிறவன் செய்ய வேண்டியது என்னென்ன, எது நினைக்கத்தக்கது, எது ஜபிக்கத்தக்கது, எது பஜனம் செய்யத்தக்கது என்பனவற்றைச் சொல்லி, எனது முக்திக்கு வழி கூறியருள்வீராக! என்று பயபக்தியுடன் சுகப்பிரம்ம மகரிஷியிடம் பிரார்த்திக்கிறார். அப்போது அந்த மகரிஷி சொன்னவற்றின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம். தொலைதொடர்பும் போக்குவரத்துவசதியும், பத்திரிகையும், இணையதளமும் இன்றைய நவீன உலகில் வளர்ந்து கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றன.